புதிய ஆத்திச்சூடி - பாரதியார்
******************************************
காப்பு - பரம்பொருள் வாழ்த்து:
" ஆத்திசூடி இளம்பிறை அணிந்து
மோனத்தில் இருக்கும் முழுவெண்
மேனியான்
கருநிறங்கொண்டு பாற்கடல்
மிசைகிடப்போன்
முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
இயேசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதன் அருள் வாழ்த்தி அமரவாழ்வு
எய்துவோம்"
பொருள்:
ஆத்தி மலரை சூடி, சிறிய பிறை சந்திரனை தலையில் அணிந்து மவுன லோகத்தில் இருக்கும் வெண்மையான திருநீற்றை உடல் முழுவதும் பூசிய சிவபெருமான், கருநிற மேனியுடன் திருகடலில் பள்ளி கொண்டுள்ள திருமால், நபிகள் நாயகத்திற்கு புனித குர்ஆன் வேதத்தை அருளி செய்த அல்லாஹ், இயேசு பிராணின் தந்தையாகிய பரம பிதா என பல மதத்தினரும் உருவகம் செய்து உணர்ந்தும் உணராமலும் பல்வேறு வகையாக போற்றி புகழும் மேலான பொருள் ஒன்றே ஆகும்.
அந்த பரம்பொருளின் இயல்பு எப்பொழுதும் ஒளி வீசுகின்ற அறிவாகும் அதன் உண்மை நிலையை உணர்ந்தவர் பிறவி துன்பத்தில் இருந்து விடுபட்டவர் ஆவார். அத்தகைய பரம்பொருளை வாழ்த்தி அருள் பெற்று அழியா வாழ்வை எய்துவோமாக.
****************************************************************
1. "அச்சம் தவிர்"
2. "ஆண்மை தவறேல்"
3. "இணைத்தல் இகழ்ச்சி"
4. "ஈகைத் திறன்"
5. "உடலினை உறுதி செய்"
6. "ஊன் மிக விரும்பு"
7. "எண்ணுவது உயர்வு"
8. "ஏறுபோல் நட"
9. "ஐம்பொறி ஆற்றுகொல்"
10. "ஒற்றுமை வலிமையாம்"
***************************************************************
பாடல் -1
" அச்சம் தவிர்"
விளக்கம்:
பயத்தை நீக்கு.
***************************************************************
பாடல் - 2
"ஆண்மை தவறேல்"
விளக்கம்:
மனம் முயற்சி செய்வதிலிருந்து விலகாதே.
***************************************************************
பாடல் - 3
"இணைத்தல் இகழ்ச்சி"
விளக்கம்:
மனத் தளர்ச்சி அடைதல் தாழ்வைத் தரும்.
***************************************************************
பாடல் - 4
"ஈகைத் திறன்"
விளக்கம்:
வறியவர்களுக்கு இயன்றதை கொடுப்பதே உயர்ந்த குணமாகும்.
***************************************************************
பாடல் - 5
"உடலினை உறுதி செய்"
விளக்கம்:
உடம்பினை பயிற்சிகள் மூலம் வலிமைப்படுத்து.
***************************************************************
பாடல் - 6
"ஊன் மிக விரும்பு"
விளக்கம்:
உணவை மிகவும் விரும்பி சாப்பிடு.
***************************************************************
பாடல் - 7
"எண்ணுவது உயர்வு"
விளக்கம்:
உயர்வு தருகின்ற எண்ணங்களை எண்ணுவாயாக.
***************************************************************
பாடல் - 8
"ஏறுபோல் நட"
விளக்கம்:
ஆண் சிங்கத்தைப் போல் கம்பீரமாக நட.
***************************************************************
பாடல் - 9
"ஐம்பொறி ஆற்றுகொல்"
விளக்கம்:
ஐம்பொறிகளையும் அடக்கி ஆட்சி செய். (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையும் அடக்கி ஆள்.)
***************************************************************
பாடல் - 10
"ஒற்றுமை வலிமையாம்"
விளக்கம்:
ஒன்றுபட்டு இருப்பதே வலிமையாகும்.
***************************************************************
மீண்டும்
அடுத்த
பதிவில்.....🙏🙏🙏