Showing posts with label தமிழ் இலக்கணம். Show all posts
Showing posts with label தமிழ் இலக்கணம். Show all posts

Sunday, 17 November 2024

தமிழ் இலக்கணம் (முந்தைய பதிவில் வினா வகைகளான அறிவினா,அறியாவினா, ஐயவினா, கொடை வினா, கொளல் வினா , ஏவல் வினா வ பற்றிய விளக்கத்தை பற்றி தெளிவாக அறிந்து கொண்ட நிலையில் ,இன்றைய இலக்கணம் கற்பித்தல் பகுதியில் விடை வகைகள் ஆன சுட்டு விடை, மறைவிடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை பற்றிய விளக்கத்தையும் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.)

               விடை வகை 



முன்னுரை:


        வினவப்படும் வினாவிற்கு ஏற்ப விடை அளிப்பது தான் மொழிநடையின் சிறப்பு .

         தேர்வு நாளை நடைபெறுமா? எனக் கேட்ட ஒருவனிடம் என் தங்கை ஏழாம் வகுப்பில் படிக்கிறாள் எனக் கூறுவது தவறு. வினாவும் விடையும் பிழை இன்றி அமைதலே முறை. 


வேறு பெயர்கள்:


       இறை,செப்பு, பதில் என்பன விடையின் வேறு பெயர்கள்.


விடை வகை:


       விடை எண் (எட்டு) வகைப்படும்.அவை , 


        1.சுட்டு விடை 


        2.மறை விடை 


        3. நேர் விடை 


        4.ஏவல்  விடை 


        5.வினா எதிர்

          வினாதல் விடை 


        6.உற்றது உரைத்தல்

            விடை


        7. உறுவது கூறல்

            விடை 


        8. இனமொழி விடை 


என்பன.


1.சுட்டு விடை :


        வினவும் வினாவிற்கு சுட்டி விடை அளிப்பது சுட்டு விடை ஆகும்.

(எ.கா)

      ★  தென்காசிக்குச்

            செல்லும் வழி யாது?

      ★  சென்னைக்கு வழி

              யாது ?

        என்ற வினாவிற்கு இது  என விடை அளிப்பது சுட்டு விடை ஆகும்.


 2.மறை விடை: 


          வினவும் வினாவிற்கு எதிர்மறை பொருளில் விடை இருப்பின் மறைவிடை எனப்படும்.

(எ.கா)

         ★  இது செய்வாயா ?

            என்ற வினாவிற்கு 'செய்யேன்' என  விடையளித்தால் அது மறைவிடை எனப்படும்.


  3. நேர் விடை :


      வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடை அளித்தால் அது நேர்விடை  ஆகும்.

(எ.கா)

            நீ நாளை பள்ளி

                   செல்வாயா?

         இவ் வினாவிற்கு செய்வேன் என்று விடையளித்தால்  அது நேர்விடை ஆகும்.


4.ஏவல்  விடை :


         வினவப்படும் வினாவிற்கு வினவியவரையே ஏவுதல் ஏவல் விடை எனப்படும்.

(எ.கா)

        ★ அங்காடிக்கு

                       செல்வாயா? 

          இவ் வினாவிற்கு நீயே செல் என்று விடையளித்தால் (வினவியவரையே ஏவுவதால்) அது ஏவல் விடை ஆகும்.


5.வினா எதிர் வினாதல் விடை :


         வினவும் வினாவிற்கு விடையாக வினாவாகவே கூறுதல் வினா எதிர் வினாதல் விடை ஆகும்.

(எ.கா)

         ★ நீ தேர்வுக்குப் 

               படித்தாயா?

        இவ்வினாவிற்கு விடையாக படிக்காமல் இருப்பேனா? என்று வினவுவது வினா எதிர் வினாதல் விடை ஆகும்.


6.உற்றது உரைத்தல் விடை:


            வினவும் வினாவிற்கு தனக்கு உற்றதை விடையாக கூறுதல் உற்றது உரைத்தல் விடை  ஆகும்.

(எ.கா)

        நீ சொற்பொழிவு

               ஆற்றுவாயா ?

         இவ் வினாவிற்கு 'தொண்டை வலிக்கிறது' என்று தனக்கு நேர்ந்ததை கூறுவது உற்றது உரைத்தல் விடை ஆகும்.


7. உறுவது கூறல் விடை :


      வினவும் வினாவிற்குத் தனக்கு நிகழப்போவதை விடையாக கூறுவது உறுவது கூறல் விடை ஆகும்.

(எ.கா)

      ★   நீ    இதைச்

           சாப்பிடுவாயா ?

        என்ற வினாவிற்கு 'வயிறு வலிக்கும்' என்று கூறுதல் உறுவது கூறல் விடை ஆகும்.


8. இனமொழி விடை :


     வினவும் வினாவிற்கு இனமான வேரூன்றை விடையாக் கூறுவது இனமொழி விடை ஆகும்.

(எ.கா)

         ★ நீ பாடுவாயா?

          இவ்வினாவிற்கு 'ஆடுவேன்' எனக் கூறுதல் பாடலுக்கு இனமான ஆடலை குறிப்பிட்டமையால்  இனமொழி விடை ஆகும்.


 முடிவுரை:


         ★ சுட்டு, 

         ★ மறை,

         ★ நேர்.

         ஆகிய மூன்றும் வெளிப்படையாக விடையைக் கூறுவது ஆகும் .

     ★ஏவல் ,

     ★வினா எதிர் வினாதல்,

     ★உற்றது உரைத்தல்,

     ★உறுவது கூறல்,

     ★இனமொழி. 

      ஆகிய ஐந்தும் வினாக்களுக்கு உரிய விடையை குறிப்பால் உணர்த்துவன ஆகும்.


"சுட்டு மறைநேர் ஏவல்  

                                         வினாதல்

 உற்ற(து) உரைத்தல்

                            உறுவது கூறல் இனமொழி எனும் என

                         இறையுள் இறுதி

 நிலவிய ஐந்துமப்

         பொருண்மையின் நேர்ப"

                            (  நன்னூல் - 386 )

மீண்டும் 

           அடுத்த 

                        பதிவில்.........🙏


👆This Content Sponsored By👇


"This Content Sponsored by Genreviews.Online


Genreviews.online is One of the Review Portal Site


Website Link: https://genreviews.online/


Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"





   


Tuesday, 8 October 2024

(தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் ) இன்றைய இலக்கணம் கற்பித்தல் பகுதியில் சொற்றொடரின் வகைகளில் கட்டளைத் தொடர், தனிநிலைத் தொடர், தொடர் நிலைத்தொடர், கலவைத் தொடர் ஆகியவற்றைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

 


சொற்றொடர் வகைகள்

முன்னுரை:

      சொற்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது சொற்றொடர் எனப்படும். சொற்றொடரின் வகைகள் பற்றிய முந்தைய பதிவின் தொடர்ச்சியைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

💥 கட்டளைத் தொடர்:


       நீ பள்ளிக்குப் புறப்படும் போது, உன்னிடம்  அம்மா கூறுவது என்ன? 


             பார்த்துப் போ, 


             கவனமாகப் படி என்று தானே.


       இவ்வாறு,    ஒரு   செயல் அல்லது   சில    செயல்களை     பின்பற்றும்படி   ஆணையிட்டு கூறுவது கட்டளைத் தொடர்.


(எ.கா)


            வேகமாக செல்  

            புத்தகத்தை எடு


💥 தனிநிலைத் தொடர்:

 

       ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையை கொண்டு முடிவது தனிநிலைத் தொடர்.


(எ.கா)


        1. அழகன் பாடம் எழுதுகிறான் .


        2. மா,‌ பலா,வாழை ஆகியன முக்கனிகள் 


           இத்தொடர்களில் முதல் தொடரில் அழகன் என்பது எழுவாய்.


            இரண்டாம் தொடரில் மா, பலா, வாழை என்பன எழுவாய்கள் .


            இவ்வாறாக ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையை கொண்டு முடிவது தனிநிலைத் தொடர்.


💥தொடர்நிலைத் தொடர்:


         ஓர்      எழுவாய்       பல பயனிலைகளைக் கொண்டு முடிவது தொடர்நிலைத்தொடர்.


        தொடர்நிலை தொடர்கள்  

                 💥  அதனால்,    

                 💥  ஆகையால், 

                 💥  ஏனெனில்  முதலிய            இணைப்புச்    சொற்களைப்          பெற்று வரும்.

       

(எ.கா)


          ★ கார்மேகம் கடுமையாக உழைத்தார்; அதனால் வாழ்வில் உயர்ந்தார் .


           ★ நேற்று மழை பெய்தது; அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின.

 

 💥 கலவைத் தொடர்: 


      1.நேற்று புயல் வீசியதால் பள்ளிக்கு விடுமுறை.


      2. முருகன் இரவும் பகலும் அயராது படித்ததால் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றான்.


      இவ்வாறு ,ஒரு தனி சொற்றொடர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை தொடர்களுடன் கலந்து வருவது கலவைத் தொடர் ஆகும்.


               இதன் தொடர்ச்சி மீண்டும் அடுத்த பதிவில்.... 👍

👆👆This content sponsored by👇👇


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"


Sunday, 8 September 2024

தமிழ் இலக்கணம் (சொற்றொடர் வகைகள்)

 1.செய்தித்தொடர்


         அ)  பரிதிமாற் கலைஞர்        மதுரைக்கு அருகில் உள்ள விளாச்சேரியில் பிறந்தார்.


        ஆ) திருவள்ளுவர் திருக்குறளை   இயற்றினார்.


        இவ்விரு தொடர்களும் செய்திகளைத்  தெளிவாக எடுத்துக்  கூறுகின்றன. இவ்வாறு  ஒரு கருத்தினை செய்தியாக  தெரிவிப்பது செய்தித்தொடர் எனப்படும்.


2. வினாத்தொடர்


எழில்,என்ன சாப்பிட்டாய்? 


ன்பரசி, நேற்று நீ ஏன் பள்ளிக்கு வரவில்லை?


எங்கே செல்கிறாய்?


      இவ்வாறு வினாப் பொருளைத் தரும் தொடர் வினாத்தொடர் எனப்படும். 

         ★ என்ன? 

         ★  ஏன்? 

         ★  எங்கே? 

         ★  எப்படி? 

         ★  எதற்கு? 


முதலிய வினாச் சொற்கள் வினாத் தொடரில் அமையும்.


3. உணர்ச்சித் தொடர்


         நீங்கள் சென்னைக்கு அருகில் உள்ள பூண்டி ஏரியை பார்த்ததுண்டா?


        அதனைப் பார்த்ததும் உங்களுக்கு தோன்றியது என்ன?  


"அடேயப்பா! எவ்வளவு பெரிய ஏரி!"


        கண்ணகியும் கயல் விழியும் பாதையில் நடந்துகொண்டே பேசிச் செல்கின்றனர்.

        கயல்விழியின் காலில் முள் ஆழமாக் குத்திவிட்டது. உடனே, அவள் எப்படி அலறியிருப்பாள்? 


"ஐயோ, முள் குத்தி விட்டதே!"


       இவ்வாறு நாம் பேசும் செய்திகள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் தொடர்களாக அமைந்தால் அவற்றை உணர்ச்சி தொடர்கள் என்கிறோம்.


       ★.     மகிழ்ச்சி,

       ★.    வியப்பு, 

       ★.    துன்பம் 


முதலிய உணர்ச்சிகள் வெளிப்படுமாறு அமைவது, உணர்ச்சித் தொடர். 


         என்னே என்னும் சொல்லை வியப்புக் குறித்தும், 


         அந்தோ என்னும் சொல்லை துன்பம் குறித்தும் சொற்றொடர்களில் அமைத்துக் காட்டலாம்.


(எ.கா)


என்னே, இமயமலையின் உயரம்!


அந்தோ, நாய் வண்டியில் அடிபட்டு விட்டதே!




மீண்டும் அடுத்த பதிவில்........


Please click the follow button, 🙏 🙏 🙏 🙏 



      

Saturday, 7 September 2024

தமிழ் இலக்கணம்(மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் )

 

மகரக்குறுக்கம்


          "ம்" என்னும் மெய்யெழுத்து தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலித்தல் மகரக்குறுக்கம் எனப்படும்.

          அதாவது, ம் என்னும் மெய்யெழுத்து, செய்யுளில் தனக்குரிய அரை  மாத்திரை அளவில் இருந்து கால் மாத்திரை அளவாக குறைந்து ஒலிக்கும்.


     ★ செய்யுளில் இடம்பெறும் போலும், மருளும் ஆகிய மகர ஈற்றுச் சொற்கள் ஈற்றயல்  உகரங் கெட்டு போல்ம்,மருள்ம்  என்றாகிப் பின் போன்ம் மருண்ம் என திரியும்.


(எ.கா)


போலும்  -  போல்ம்  -  போன்ம் 

மருளும்  -  மருள்ம்   -  மருண்ம்


       இவ்வாறு திரியும் னகர, ணகரங்களின் முன்னுள்ள மகரம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்.


  ★ மகர ஈற்றுச்சொல் முன் வகர(வ்) முதல்மொழி வந்து சேரும்போது, நிலைமொழி மகரம் (ம்) குறைந்து ஒலிக்கும்.


(எ.கா)


வரும் + வண்டி  = வரும் வண்டி


      ம் தன் அரை மாத்திரையில் இருந்து குறைந்து, கால் மாத்திரையாக ஒலிக்கும்.


 ( வரும் - இது மகர ஈற்று

                  நிலைமொழி .

வண்டி - இது வ் என்னும் வகர 

                  முதல் மொழி )


      இவ்விரண்டு இடங்களிலும் குறைந்து ஒலிக்கும் மகரமே மகர குறுக்கம் எனப்படும் .


ஆய்தக்குறுக்கம் 


ஆய்தம் + குறுக்கம் 

                  =

 ஆய்தக்குறுக்கம் .


     (ஃ என்னும் எழுத்து குறைந்து ஒலிப்பது)


    நிலை மொழியில் தனிக்குறிலை அடுத்து வரும் லகர ளகரங்கள் வருமொழியில் உள்ள தகரத்தோடு (த்) சேரும்போது ஆய்தமாகத் திரியும். 


      இவ்வாறு, புணர்ச்சியில் திரிந்த ஆய்தம் தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவாக ஒலிக்கும். அதுவே ஆயுதக் குறுக்கம் எனப்படும்.


   பிறகு,வருமொழியில் உள்ள தகரம் (த்) நிலை மொழிக்கேற்ப றகரமாக (ற்) வும் டகரமாக (ட்) வும் மாறிப் புணரும். 

  

(எ.கா)


     கல் + தீது   =  கஃறீது,


    முள் + தீது  =  முஃடீது.


மீண்டும் அடுத்த பதிவில்,.....


Please click the follow button 🙏 


   


Sunday, 25 August 2024

தமிழ் இலக்கணம் ( ஐகார, ஔகார குறுக்கம்)

 ஐகார குறுக்கம்:

ஐகாரம்    -  ஐ என்னும்

                        எழுத்து 

குறுக்கம் -  குறைந்து

                      ஒலிப்பதால்

                       குறுக்கம்


        " "என்னும் நெட்டெழுத்தை தனியாக ஒலித்துப் பாருங்கள். அது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் இருந்து குறையாமல் ஒலிக்கும்.


        ஆனால், இவ்வெழுத்தை (ஐ) சொல்லின் முதலிலும், இடையிலும், ஈற்றிலும் வருமாறு எழுதி ஒலித்துப் பாருங்கள். அஃது, ஒலி  குறைந்து ஒலிப்பதனை உணர்வீர்.


            தனித்து ஒலிக்காது, சொற்களில் சேர்ந்து ஒலிக்கின்ற ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கின்றது. இதற்கு ஐகாரக் குறுக்கம் என்று பெயர்.


(எ.கா)


ஐம்பது       -   சொல்லுக்கு

                         முதலில் வந்து

                         ஒன்றரை

                         மாத்திரையாகக்

                         குறைந்தது.

தலைவன் -  சொல்லுக்கு

                         இடையில்     

                         வந்து

                         ஒரு

                         மாத்திரையாக்

                         குறைந்தது.

கடலை.      -   சொல்லுக்கு 

                         ஈற்றில் வந்து

                         ஒரு

                         மாத்திரையாகக்

                         குறைந்தது.


       இவ்வாறு சொல்லுக்கு முதல், இடை, கடை ஆகிய மூவிடங்களில் வரும் ஐகாரம் தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும்.


      இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம், ஐகாரக் குறுக்கம் எனப்படும்.


ஔகாரக் குறுக்கம்:


ஔகாரம் -  ஔ என்னும் 

                          எழுத்து

குறுக்கம் -    குறைந்து 

                           ஒலிப்பதால்

                            குறுக்கம்


         ஔ என்னும் நெடில் எழுத்தும் என்னும் நெடில் எழுத்தை போலவே தனியாக ஒலிக்கும் போது இரண்டு மாத்திரை அளவில் ஒலிக்கும்.


        சொற்களில் வரும் போது தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும்.

(எ.கா)

         ஔ,  வௌ,  சௌ


      ஆனால் சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஔகாரம் ஒன்றரை மாத்திரை அளவினதாய் குறைந்து ஒலிக்கும்.அதுவே ஔகாரக்குறுக்கம் எனப்படும்.


(எ.கா)


       ★ ஔவை

       ★ வௌவால்

       ★ மௌவல் 

{ஒன்றரை மாத்திரையாக் குறைந்தது}

     சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் ஔகாரம் வராது.


"தற்கட் டளபொழி ஐம்மூ 

                                     வழியும்

  நடையும் ஔவும் முதலற் 

                                      றாகும்."

                     நன்னூல் - 95


மீண்டும் அடுத்த பதிவில்……

Please click the follow button 🙏 


        



Thursday, 22 August 2024

தமிழ் இலக்கணம் (குற்றியலிகரம்)

          குற்றியலிகரம் :

    குறுமை + இயல் + இகரம் 


      குறுமை என்றால் குறுகிய  என்பது பொருள் .


★      இயல் என்றால் ஓசை என்பது பொருள் .


★      இகரம் என்றால் "இ" என்னும் எழுத்து.


★       எனவே குறுகிய ஓசையுடைய இகரம் குற்றியலிகரம் எனப்படும். 


★       குற்றியலுகரத்தின் உகரம் ஒரு மாத்திரையில் குறைந்து ஒலிப்பது போலவே குற்றியலிகரத்தில் வரும் இகரமும் தன் ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரை அளவு குறைந்து ஒலிக்கும்.


   ★    நாகு +யாது =நாகியாது 

   ★   வீடு +யாது =வீடியாது


 இச்சொற்களை ஒலித்துப் பாருங்கள்.


    ★    நாகு, வீடு என்பன நெடில் தொடர் குற்றியலுகரச் சொற்கள்.


    ★    இவை நிலை மொழியாய் நிற்க வருமொழியின் முதல் எழுத்து யகரமாக இருப்பின் உகரம் இகரமாகும். இந்த இகரம் தான் குற்றியலிகரம் எனப்படும்.


     ★   அதாவது, நிலைமொழி குற்றியலுகரமாக இருந்து, வரும் மொழி யகரம் வரின், நிலைமொழி உகரம் இகரமாக திரிந்து தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் எனப்படும்.


 (எ.கா )

வண்டு +யாது = வண்டியாது 

வரகு + யாது =வரகியாது.


       ★   மியா என்னும் அசைச்சொல்லில் உள்ள இகரமும் (மி = ம்+இ )தன் மாத்திரையில் குறைந்து ஒலிக்கும் . இதுவும் குற்றியலிகரம் எனப்படும்.


( எ.கா) 

            கேண்மியா 

            சென்மியா


"யகரம் வரக் குறல் உத்திரி

                                          இகரமும் 

அசைச்சொல் மியாவின்

                          இகரமும் குறிய "

                                    நன்னூல் ,93

மீண்டும் அடுத்த பதிவில்....



Tuesday, 20 August 2024

தமிழ் இலக்கணம்(குற்றியலுகரம்)

குற்றியலுகரம் :

குற்றியலுகரம் என்றால் என்ன?    

        குறுமை+ இயல்+ உகரம்

                  = குற்றியலுகரம் 

 ★  குறுமை என்றால் குறுகிய என்பது பொருள்.

 ★   இயல் என்றால் ஓசை என்பது பொருள் 

 ★   உகரம் என்றால் உ என்னும் எழுத்து. 

 ★    எனவே, குறுகிய ஓசை உடைய உகரம் குற்றியலுகரம்  ஆகும்.

  ★     ஒவ்வொரு எழுத்துக்கும் ஒலிக்கின்ற கால அளவு உண்டு.

  குறில்   -   ஒரு மாத்திரை

 நெடில்   -    இரண்டு மாத்திரை

  மெய்      -     அரை மாத்திரை

    ★   என்னும் கால அளவில் தான் எழுத்துக்களை ஒலிக்க வேண்டும்.

    ★    உகரம் குறிலானதால் ஒரு மாத்திரை கால அளவில்தான் எழுத்துகளை ஒலிக்க வேண்டும்.

     ★   ஆனால், அஃது ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல் சில சொற்களில் அரை மாத்திரை கால அளவே ஒலிக்கும். 

      ★ அவ்வாறு ஒலிப்பதைத்தான் குற்றியலுகரம் என இலக்கண நூலார் குறிப்பிட்டுள்ளனர். 

      ★  சில சொற்களுக்கு இறுதியில் ஆறு வல்லின மெய் எழுத்துக்கள் சேர்ந்து வரும்போது உகரம் அரை மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்.

          க் + உ  =  கு

          ச்  + உ  =  சு

          ட்  + உ  =  டு

          த் +  உ  =  து

          ப் +  உ  =  பு

         ற்  +  உ  = று

       ★  கு, சு,  டு,  து,  பு,  று என்னும் ஆறு வல்லின எழுத்துக்கள் தனி நெடிலைச் சார்ந்து வரும்போதும், பல எழுத்துக்களைச் சார்ந்து சொல்லின் இறுதியில் வரும்போதும் ஒரு மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும்.

      ★   சொல்லின் ஈற்று அயல் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு அதனை ஆறு வகையாக பிரிப்பர்.அவை,

1. நெடில் தொடர் குற்றியலுகரம் 

(எ.கா)

           நாகு, காசு, ஆடு, மாது, கோபு, ஆறு

2. ஆய்தத் தொடர் குற்றியலுகரம்

(எ.கா)

         எஃகு, கஃசு, அஃது, இஃது 

3. உயிர்த்தொடர் குற்றியலுகரம்

(எ.கா)

           அரசு, அழகு, பண்பாடு,

           உனது, உருபு, பாலாறு, மரபு

4. வன்றொடர்க் குற்றியலுகரம்

(எ.கா)

           பாக்கு, பத்து, உப்பு, சுக்கு,

           தச்சு, பட்டு

5. மென்றொடர்க் குற்றியலுகரம்

(எ.கா)

          சங்கு, பஞ்சு, வண்டு, பந்து

6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

(எ.கா)

             செய்து, கொய்து, சார்பு,

             சால்பு,மூழ்கு, மார்பு.

குறிப்பு:

1. கு, சு,  டு,  து,  பு,  று என்பன வல்லின மெய்களின் மேல் உக்கரம் ஊர்ந்து வரும் எழுத்துக்கள். 

2. குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை. 

3. ஈற்று அயல் எழுத்தாக தனி நெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப்பெற்று வரும்.

4. நெடில்தொடர்க் குற்றியலுகரம் மட்டுமே இரண்டு எழுத்துக்களை பெற்று வரும்.(எ.கா) ஆடு, மாடு, காது. 

          ஏனைய ஐவகை குற்றியலுகரச் சொற்கள் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களை பெற்று வரும். (எ.கா) சுக்கு, பாலாறு,  காட்டாறு..........

"நெடிலோடு ஆய்தம் உயிர்வலி

                                          மெலிஇடைத்

தொடர்மொழி இறுதிவன்மையூ  ருகரம்

அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே."

                                        - நன்னூல்,94


        

மீண்டும் அடுத்த பதிவில்........






தமிழ் இலக்கணம் (ஒற்றளபெடை)

 ஒற்றளபெடை 

         "இலங்ங்கு வெண்பிறை"

          "மடங்ங் கலந்த மனன்"

   ★      மேற்காணும் தொடர்களில் இலங்ங்கு, மடங்ங்கு என மெய்யெழுத்துக்கள் அளபெடுத்துள்ளன.

  ★     இலங்கு, மடங்கு என்பவையே இயல்பான சொற்கள்.

  ★    இவைச் செய்யுளில் வரும்பொழுது ஓசையில் குறைகின்றன.

   ★   எனவே இவற்றில் உள்ள மெய்யெழுத்துக்கள் அளபெடுத்துள்ளன.

   ★   இவ்வாறு செய்யுளில் ஓசை குறையும்பொழுது, ரன் அதனை நிறைவு செய்வதற்குச் சொல்லில் உள்ள மெய்யெழுத்து அளபெடுப்பது ஒற்றளபெடை எனப்படும்.

   ★   மெய்யெழுத்துக்கள் அளபெடுக்கும் பொழுது  தம்முடைய அரை மாத்திரையிலிருந்து ஒரு மாத்திரையாக மிகுந்து ஒலிக்கும்.

   ★    இதற்கு அடையாளமாக அந்த மெய் எழுத்து அதன் அருகில் எழுதப்படும்.

   ★    ங், ஞ் , ண், ந், ம், ன், ய், ல், ள் ஆகிய பத்து மெய் எழுத்துக்களும் ஆயுத எழுத்தும் அளபெடுக்கும்.

   ★    சொல்லின் இடையிலும் இறுதியிலும் மட்டுமே ஒற்றளபெடை நிகழும். 

    ★    ஒற்றளபெடை குறிலையடுத்தும் குறிலிணையை அடுத்தும் அளபெடுத்து வரும்.

     ★   "எங்ங்கு இறைவன்" -இதில் "ங்" என்னும் மெய்யெழுத்து "எ" என்னும் குறிலையடுத்து அளபெடுத்துள்ளது.

      ★   "இலங்ங்கு வெண்பிறை"-   இதில் "ங்" என்னும் மெய்யெழுத்து "இல் "என்னும் குறில் இணையை அடுத்து அளவெடுத்து வந்துள்ளது.

     ★    மெய்யெழுத்தை போன்றே ஆயுத எழுத்தும் குறிலை அடுத்தும் குறில் இணையை அடுத்தும் அளபெடுத்து வரும்.

     ★   "எஃஃகிலங்கிய கையர்"-இதில் குறிலையடுத்து ஆய்தம் அளபெடுத்துள்ளது.

      ★   "இலங்ங்கு முத்தின்"-இதில் குறிலிணையை அடுத்து ஆய்தம் அளபெடுத்துள்ளது.



≈≈≈≈இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.......


தமிழ் இலக்கணம் (செய்யுளிசை அளபெடை)

செய்யுளிசை அளபெடை:


கற்றதனால் ஆய பயனென்கொல் 

                                         வாலறிவன்

 நற்றாள் தொழாஅர் எனின்"


        இக்குறட்பாவில் தொழார் என்னும் சொல்லே தொழாஅர் என நீண்டு வந்துள்ளது.


        தொழார் என்பதே இயல்பான சொல்.இது செய்யுளில் வரும்பொழுது ஓசை குறைந்து ஓர சையாகி நின்று யாப்பிலக்கணம் பிழைபடுகின்றது. 


         எனவே இதனை நிறைவு செய்ய சொல்லின் இடையில் உள்ள என்னும் உயிரெழுத்து இரண்டு மாத்திரையின் மிகுந்து ஒலிக்கிறது. 


         இதற்கு அடையாளமாக அதன் இனமான என்னும் குற்றெழுத்து அருகில் எழுதப்பட்டுள்ளது.


          இவ்வாறு செய்யுளில் ஓசை குறையும் பொழுது அதனை நிறைவு செய்ய சொல்லின் முதல், இடை, இறுதியில் உள்ள உயிர் நெடில் எழுத்துக்கள் அளபெடுத்து வருவதை செய்யுளிசை அளபெடை என்பர். இதை இசை நிறை அளபெடை என்றும் வழங்குவர். 


குறிப்பு :

               அ என்ற எழுத்து வெளிப்படையாக வந்தால்  , அதனை செய்யுளிசை அளபெடை அல்லது இசை நிறை அளபெடை என்றும் கூறலாம்.


எ.கா:    

                  கடாஅ

                  கடாஅக்

                   படாஅ


இன்னிசை அளபெடை:


"கெடுப்பதூவும் கெட்டார்க்கு சார்வாய் 

                                           மற்றாங்கே 

எடுப்பதூவும் எல்லாம் மழை"


          இக்குறட்பாவில் கெடுப்பதூஉம் எடுப்பதூஉம் என்னும் சொற்களில் உள்ள தூ என்னும் நெட்டெழுத்து அளபெடுத்துள்ளது. 


        கெடுப்பதும் எடுப்பதும் என்பது இயல்பான சொற்கள். 


         கெடுப்பதும் எடுப்பதும் என்று இருப்பினும் யாப்பிலக்கணம் கெடுவதில்லை. 

        

        ஆனால் இனிய ஓசையை தரும் பொருட்டு கெடுப்பதூவும் எடுப்பதூவும் என்று அளபெடுத்துள்ளது.


           இவ்வாறு செய்யுளில் ஓசை குறையாத பொழுதும் செவிக்கு இனிய ஓசையை தரும் பொருட்டு உயிர் குறில் நெடிலாகி மேலும் அளபெடுத்து வருவது இன்னிசை அளபெடை ஆகும்.


சொல்லிசை அளபெடை:


"உரன்நசைஇ உள்ளம்

                   துணையாகச் சென்றார் 

வரனசைஇ இன்னும் உள்ளேன்."


            இக்குறட்பாவில் உரனசை, வரனசை என்றும் இருப்பினும் செய்யுளின் ஓசை குறைவதில்லை. 


           நசை என்பது விருப்பம் என்னும் பொருள் தரும் பெயர்ச்சொல்லாகும்.


           அப்பொருள் நசைஇ என அளபெடுத்தலால் விரும்பி என்னும் பொருள் தரும் வினைச்சொல் ஆயிற்று.


            இவ்வாறு செய்யுளில் ஓசை குறையாத பொழுதும் ஒரு சொல் மற்றொரு சொல்லாக திரிவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.


             பெயர்ச்சொல் அளபடையால் திரிந்து பெயரெச்சமாகவோ வினையெச்சமாகவோ வரும்.


மீண்டும் அடுத்த பதிவில்........


PLEASE CLICK THE FOLLOW BUTTON 🙏 

          




Friday, 16 August 2024

தமிழ் இலக்கணம் (ஆய்தம், உயிரளபெடை)

சார்பெழுத்துக்களின் வகைகள் 

2. ஆயுதம்

        ★ மூன்று புள்ளிகளை உடையது.

        ★ ஃ என்று எழுதப்படும்.

        ★  தானாகவோ,   மெய் எழுத்துக்களோடு சேர்ந்தோ ஒலிக்காது.

         ★  மொழிக்கு முதலில் தனி குற்றழுத்தை சார்ந்து வரும்.

         ★ மொழிக்கு இறுதியில் உயிர்மெய் எழுத்தை சார்ந்து வரும். 

         ★ ஆயுத எழுத்திற்கு முப்பாற் புள்ளி என்றும் பெயர் உண்டு.

         ★ இதனை தனிநிலை என்றும் கூறுவர்.

3.உயிரளபெடை:

           புலவர்கள் தாம் இயற்றும் செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்வதற்காக அதன் அருகில் பிறிதோர் இன எழுத்தை சேர்ப்பர்.

        உயிரெழுத்தைக் கொண்டு ஓசையை நிறைவு செய்வது உயிர் அளபெடை எனப்படும்.

        செய்யுளில் ஓசை குறையும்பொழுது, சொல்லின் முதல், இடை,  இறுதியில் நிற்கும் உயிரெழுத்துகளில் நெடில் ஏழும் தம் அளவில் நீண்டு ஒலிக்கும். இவ்வாறு உயிர் எழுத்து அளபெடுத்து வருவது உயிரளபெடை எனப்படும்.

         உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை,

★செய்யுளிசை அளபெடை

★இன்னிசை அளபெடை 

★சொல்லிசை அளபெடை



Tuesday, 13 August 2024

தமிழ் இலக்கணம் ( உயிர் மெய்)


         


உயிர்மெய் 

★ உயிரும் மெய்யும் கூடி பிறக்கும் எழுத்து உயிர்மெய் எழுத்தாகும்.
                      க் + அ = க
        ★ மெய்யொளி முன்னும் உயிரொளி பின்னும் வரும்.
        ★  18 மெய் எழுத்துகளின் மேலும் 12 உயிர் எழுத்துகளும் தனித் தனியாகச் சேர்ந்து 216 உயிர்மெய் எழுத்துக்களாகும்.
       ★ அவை உயிரையும் மெய்யையும் சார்ந்து தோன்றுவதால் சார்பெழுத்துகள் ஆகும்.
  ★   க்  +  அ =  க
        ங்  +  அ =  ங
         ச்   +  அ =  ச
        ஞ்  +  அ =  ஞ
         ட்   +  அ =   ட
        ண் +  அ =   ண
         த்   +  அ =    த
         ந்   +  அ =    ந
         ப்   +  அ =    ப
         ம்   +  அ =   ம
         ய்  +   அ =  ய
          ர்  +   அ =  ர
         ல்  +   அ =  ல
         வ்  +   அ  = வ
          ழ் +    அ  = ழ
          ள் +   அ = ள
          ற்  +   அ = ற
          ன் +   அ = ன

★       க்  +  ஆ =  கா
          ங்  +  ஆ =  ஙா
          ச்   +  ஆ =  சா
         ஞ்  +  ஆ =  ஞா
          ட்   +  ஆ =   டா
        ண் +  ஆ =   ணா
         த்   +  ஆ =    தா
         ந்   +  ஆ =    நா
         ப்   +  ஆ =    பா
         ம்   +  ஆ =   மா
         ய்  +   ஆ =  யா
          ர்  +   ஆ =  ரா
         ல்  +   ஆ =  லா
         வ்  +   அ  = வா
          ழ் +    ஆ  = ழா
          ள் +   ஆ = ளா
          ற்  +   ஆ = றா
          ன் +   ஆ = னா

★     க்  +  இ  =  கி
        ங்  +  இ  =  ஙி
         ச்   +  இ  =  சி
        ஞ்  +  இ  =  ஞி
         ட்   +  இ  =   டி
        ண் +  இ  =   ணி
         த்   +  இ =    தி
         ந்   +  இ =    நி
         ப்   +  இ =    பி
         ம்   +  இ =   மி
         ய்  +   இ =  யி
          ர்  +   இ =  ரி
         ல்  +   இ =  லி
         வ்  +   இ  = வி
          ழ் +    இ  = ழி
          ள் +   இ = ளி
          ற்  +   இ = றி
          ன் +   இ = னி

 ★    க்  +  ஈ =  கீ

        ங்  +  ஈ =  ஙீ
         ச்   +  ஈ =  சீ
        ஞ்  +  ஈ =  ஞீ
         ட்   +  ஈ =   டீ
        ண் +  ஈ =   ணீ
         த்   +  ஈ =    தீ
         ந்   +  ஈ =    நீ
         ப்   +  ஈ =    பீ
         ம்   +  ஈ =   மீ
         ய்  +   ஈ =  யீ
          ர்  +   ஈ =  ரீ
         ல்  +   ஈ =  லீ
         வ்  +   ஈ  = வீ
          ழ் +    ஈ  = ழீ
          ள் +   ஈ = ளீ
          ற்  +   ஈ = றீ
          ன் +   ஈ = னீ

 ★   க்  +  உ =  கு
        ங்  +  உ =  ஙு
         ச்   +  உ =  சு
        ஞ்  +  உ =  ஞு
         ட்   +  உ =   டு
        ண் +  உ =   ணு
         த்   +  உ =    து
         ந்   +  உ =    நு
         ப்   +  உ =    பு
         ம்   +  உ =   மு
         ய்  +   உ =  யு
          ர்  +   உ =  ரு
         ல்  +   உ =  லு
         வ்  +   உ  = வு
          ழ் +    உ  = ழு
          ள் +   உ = ளு
          ற்  +   உ = று
          ன் +   உ = னு

★     க்  +  ஊ =  கூ
        ங்  +  ஊ =  ஙூ
         ச்   +  ஊ =  சூ
        ஞ்  +  ஊ =  ஞூ
         ட்   +  ஊ =   டூ
        ண் +  ஊ =   ணூ
         த்   +  ஊ =    தூ
         ந்   +  ஊ =    நூ
         ப்   +  ஊ =    பூ
         ம்   +  ஊ =   மூ
         ய்  +   ஊ =  யூ
          ர்  +   ஊ =  ரூ
         ல்  +   ஊ =  லூ
         வ்  +   அ  = வூ
          ழ் +    ஊ  = ழூ
          ள் +   ஊ = ளூ
          ற்  +   ஊ = றூ
          ன் +   ஊ = னூ

 ★     க்  +  எ =  கெ
        ங்  +  எ =  ஙெ
         ச்   +  எ =  செ
        ஞ்  +  எ =  ஞெ
         ட்   +  எ =   டெ
        ண் +  எ =   ணெ
         த்   +  எ =    தெ
         ந்   +  எ =    நெ
         ப்   +  எ =    பெ
         ம்   +  எ =   மெ
         ய்  +   எ =  யெ
          ர்  +   எ =  ரெ
         ல்  +   எ =  லெ
         வ்  +   எ  = வெ
          ழ் +    எ  = ழெ
          ள் +   எ = ளெ
          ற்  +   எ = றெ
          ன் +   எ = னெ

 ★    க்  +  ஏ =  கே
        ங்  +  ஏ =  ஙே
         ச்   +  ஏ =  சே
        ஞ்  +  ஏ =  ஞே
         ட்   +  ஏ =   டே
        ண் +  ஏ =   ணே
         த்   +  ஏ =    தே
         ந்   +  ஏ =    நே
         ப்   +  ஏ =    பே
         ம்   +  ஏ =   மே
         ய்  +   ஏ =  யே
          ர்  +   ஏ =  ரே
         ல்  +   ஏ =  லே
         வ்  +   ஏ  = வே
          ழ் +    ஏ  = ழே
          ள் +   ஏ = ளே
          ற்  +   ஏ = றே
          ன் +   ஏ = னே

  ★   க்  +  ஐ =  கை
        ங்  +  ஐ =  ஙை
         ச்   +  ஐ =  சை
        ஞ்  +  ஐ =  ஞை
         ட்   +  ஐ =   டை
        ண் +  ஐ =   ணை
         த்   +  ஐ =   தை
         ந்   +  ஐ =   நை
         ப்   +  ஐ =   பை
         ம்   +  ஐ =   மை
         ய்  +   ஐ =   யை
          ர்  +   ஐ =    ரை
         ல்  +   ஐ =    லை
         வ்  +   ஐ  =   வை
          ழ் +    ஐ  =   ழை
          ள் +   ஐ =   ளை
          ற்  +   ஐ =   றை
          ன் +   ஐ =   னை

  ★    க்  +  ஒ =  கொ
        ங்  +  ஒ =  ஙொ
         ச்   +  ஒ =  சொ
        ஞ்  +  ஒ =  ஞொ
         ட்   +  ஒ =   டொ
        ண் +  ஒ =   ணொ
         த்   +  ஒ =    தொ
         ந்   +  ஒ =    நொ
         ப்   +  ஒ =    பொ
         ம்   +  ஒ =   மொ
         ய்  +   ஒ =  யொ
          ர்  +   ஒ =  ரொ
         ல்  +   ஒ =  லொ
         வ்  +   ஒ  = வொ
          ழ் +    ஒ  = ழொ
          ள் +   ஒ = ளொ
          ற்  +   ஒ = றொ
          ன் +   ஒ = னொ

 ★    க்  +  ஓ =  கோ
        ங்  +  ஓ =  ஙோ
         ச்   +  ஓ =  சோ
        ஞ்  +  ஓ =  ஞோ
         ட்   +  ஓ =   டோ
        ண் +  ஓ =   ணோ
         த்   +  ஓ =    தோ
         ந்   +  ஓ =    நோ
         ப்   +  ஓ =    போ
         ம்   +  ஓ =   மோ
         ய்  +   ஓ =  யோ
          ர்  +   ஓ =  ரோ
         ல்  +   ஓ =  லோ
         வ்  +   ஒ  = வோ
          ழ் +    ஓ  = ழோ
          ள் +   ஓ  = ளோ
          ற்  +   ஓ  = றோ
          ன் +   ஓ = னோ

 ★    க்  +  ஔ =  கௌ
        ங்  +  ஔ =  ஙௌ
         ச்   +  ஔ =  சௌ
        ஞ்  +  ஔ =  ஞௌ
         ட்   +  ஔ =   டௌ
        ண் +  ஔ =   ணௌ
         த்   +  ஔ =    தௌ
         ந்   +  ஔ =    நௌ
         ப்   +  ஔ =    பௌ
         ம்   +  ஔ =   மௌ
         ய்  +   ஔ =  யௌ
          ர்  +   ஔ =  ரௌ
         ல்  +   ஔ =  லௌ
         வ்  +   ஔ  = வௌ
          ழ் +    ஔ  = ழௌ
          ள் +   ஔ = ளௌ
          ற்  +   ஔ = றௌ
          ன் +   ஔ = னௌ
உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம்  216.


மீண்டும் அடுத்த பதிவில்.........



புதிய ஆத்திச்சூடி ( பாரதியார்)

புதிய ஆத்திச்சூடி - பாரதியார் ******************************************   காப்பு  -  பரம்பொருள்  வாழ்த்து:          " ஆத்திசூடி இளம்பி...