குற்றியலிகரம் :
குறுமை + இயல் + இகரம்
★ குறுமை என்றால் குறுகிய என்பது பொருள் .
★ இயல் என்றால் ஓசை என்பது பொருள் .
★ இகரம் என்றால் "இ" என்னும் எழுத்து.
★ எனவே குறுகிய ஓசையுடைய இகரம் குற்றியலிகரம் எனப்படும்.
★ குற்றியலுகரத்தின் உகரம் ஒரு மாத்திரையில் குறைந்து ஒலிப்பது போலவே குற்றியலிகரத்தில் வரும் இகரமும் தன் ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரை அளவு குறைந்து ஒலிக்கும்.
★ நாகு +யாது =நாகியாது
★ வீடு +யாது =வீடியாது
இச்சொற்களை ஒலித்துப் பாருங்கள்.
★ நாகு, வீடு என்பன நெடில் தொடர் குற்றியலுகரச் சொற்கள்.
★ இவை நிலை மொழியாய் நிற்க வருமொழியின் முதல் எழுத்து யகரமாக இருப்பின் உகரம் இகரமாகும். இந்த இகரம் தான் குற்றியலிகரம் எனப்படும்.
★ அதாவது, நிலைமொழி குற்றியலுகரமாக இருந்து, வரும் மொழி யகரம் வரின், நிலைமொழி உகரம் இகரமாக திரிந்து தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் எனப்படும்.
(எ.கா )
வண்டு +யாது = வண்டியாது
வரகு + யாது =வரகியாது.
★ மியா என்னும் அசைச்சொல்லில் உள்ள இகரமும் (மி = ம்+இ )தன் மாத்திரையில் குறைந்து ஒலிக்கும் . இதுவும் குற்றியலிகரம் எனப்படும்.
( எ.கா)
கேண்மியா
சென்மியா
"யகரம் வரக் குறல் உத்திரி
இகரமும்
அசைச்சொல் மியாவின்
இகரமும் குறிய "
நன்னூல் ,93
மீண்டும் அடுத்த பதிவில்....
No comments:
Post a Comment