மகரக்குறுக்கம்
"ம்" என்னும் மெய்யெழுத்து தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலித்தல் மகரக்குறுக்கம் எனப்படும்.
அதாவது, ம் என்னும் மெய்யெழுத்து, செய்யுளில் தனக்குரிய அரை மாத்திரை அளவில் இருந்து கால் மாத்திரை அளவாக குறைந்து ஒலிக்கும்.
★ செய்யுளில் இடம்பெறும் போலும், மருளும் ஆகிய மகர ஈற்றுச் சொற்கள் ஈற்றயல் உகரங் கெட்டு போல்ம்,மருள்ம் என்றாகிப் பின் போன்ம் மருண்ம் என திரியும்.
(எ.கா)
போலும் - போல்ம் - போன்ம்
மருளும் - மருள்ம் - மருண்ம்
இவ்வாறு திரியும் னகர, ணகரங்களின் முன்னுள்ள மகரம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்.
★ மகர ஈற்றுச்சொல் முன் வகர(வ்) முதல்மொழி வந்து சேரும்போது, நிலைமொழி மகரம் (ம்) குறைந்து ஒலிக்கும்.
(எ.கா)
வரும் + வண்டி = வரும் வண்டி
ம் தன் அரை மாத்திரையில் இருந்து குறைந்து, கால் மாத்திரையாக ஒலிக்கும்.
( வரும் - இது மகர ஈற்று
நிலைமொழி .
வண்டி - இது வ் என்னும் வகர
முதல் மொழி )
இவ்விரண்டு இடங்களிலும் குறைந்து ஒலிக்கும் மகரமே மகர குறுக்கம் எனப்படும் .
ஆய்தக்குறுக்கம்
ஆய்தம் + குறுக்கம்
=
ஆய்தக்குறுக்கம் .
(ஃ என்னும் எழுத்து குறைந்து ஒலிப்பது)
நிலை மொழியில் தனிக்குறிலை அடுத்து வரும் லகர ளகரங்கள் வருமொழியில் உள்ள தகரத்தோடு (த்) சேரும்போது ஆய்தமாகத் திரியும்.
இவ்வாறு, புணர்ச்சியில் திரிந்த ஆய்தம் தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவாக ஒலிக்கும். அதுவே ஆயுதக் குறுக்கம் எனப்படும்.
பிறகு,வருமொழியில் உள்ள தகரம் (த்) நிலை மொழிக்கேற்ப றகரமாக (ற்) வும் டகரமாக (ட்) வும் மாறிப் புணரும்.
(எ.கா)
கல் + தீது = கஃறீது,
முள் + தீது = முஃடீது.
மீண்டும் அடுத்த பதிவில்,.....
Please click the follow button 🙏
No comments:
Post a Comment