Tuesday, 20 August 2024

தமிழ் இலக்கணம் (ஒற்றளபெடை)

 ஒற்றளபெடை 

         "இலங்ங்கு வெண்பிறை"

          "மடங்ங் கலந்த மனன்"

   ★      மேற்காணும் தொடர்களில் இலங்ங்கு, மடங்ங்கு என மெய்யெழுத்துக்கள் அளபெடுத்துள்ளன.

  ★     இலங்கு, மடங்கு என்பவையே இயல்பான சொற்கள்.

  ★    இவைச் செய்யுளில் வரும்பொழுது ஓசையில் குறைகின்றன.

   ★   எனவே இவற்றில் உள்ள மெய்யெழுத்துக்கள் அளபெடுத்துள்ளன.

   ★   இவ்வாறு செய்யுளில் ஓசை குறையும்பொழுது, ரன் அதனை நிறைவு செய்வதற்குச் சொல்லில் உள்ள மெய்யெழுத்து அளபெடுப்பது ஒற்றளபெடை எனப்படும்.

   ★   மெய்யெழுத்துக்கள் அளபெடுக்கும் பொழுது  தம்முடைய அரை மாத்திரையிலிருந்து ஒரு மாத்திரையாக மிகுந்து ஒலிக்கும்.

   ★    இதற்கு அடையாளமாக அந்த மெய் எழுத்து அதன் அருகில் எழுதப்படும்.

   ★    ங், ஞ் , ண், ந், ம், ன், ய், ல், ள் ஆகிய பத்து மெய் எழுத்துக்களும் ஆயுத எழுத்தும் அளபெடுக்கும்.

   ★    சொல்லின் இடையிலும் இறுதியிலும் மட்டுமே ஒற்றளபெடை நிகழும். 

    ★    ஒற்றளபெடை குறிலையடுத்தும் குறிலிணையை அடுத்தும் அளபெடுத்து வரும்.

     ★   "எங்ங்கு இறைவன்" -இதில் "ங்" என்னும் மெய்யெழுத்து "எ" என்னும் குறிலையடுத்து அளபெடுத்துள்ளது.

      ★   "இலங்ங்கு வெண்பிறை"-   இதில் "ங்" என்னும் மெய்யெழுத்து "இல் "என்னும் குறில் இணையை அடுத்து அளவெடுத்து வந்துள்ளது.

     ★    மெய்யெழுத்தை போன்றே ஆயுத எழுத்தும் குறிலை அடுத்தும் குறில் இணையை அடுத்தும் அளபெடுத்து வரும்.

     ★   "எஃஃகிலங்கிய கையர்"-இதில் குறிலையடுத்து ஆய்தம் அளபெடுத்துள்ளது.

      ★   "இலங்ங்கு முத்தின்"-இதில் குறிலிணையை அடுத்து ஆய்தம் அளபெடுத்துள்ளது.



≈≈≈≈இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.......


No comments:

Post a Comment

புதிய ஆத்திச்சூடி ( பாரதியார்)

புதிய ஆத்திச்சூடி - பாரதியார் ******************************************   காப்பு  -  பரம்பொருள்  வாழ்த்து:          " ஆத்திசூடி இளம்பி...