செய்யுளிசை அளபெடை:
கற்றதனால் ஆய பயனென்கொல்
வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"
இக்குறட்பாவில் தொழார் என்னும் சொல்லே தொழாஅர் என நீண்டு வந்துள்ளது.
தொழார் என்பதே இயல்பான சொல்.இது செய்யுளில் வரும்பொழுது ஓசை குறைந்து ஓர சையாகி நின்று யாப்பிலக்கணம் பிழைபடுகின்றது.
எனவே இதனை நிறைவு செய்ய சொல்லின் இடையில் உள்ள ஆ என்னும் உயிரெழுத்து இரண்டு மாத்திரையின் மிகுந்து ஒலிக்கிறது.
இதற்கு அடையாளமாக அதன் இனமான அ என்னும் குற்றெழுத்து அருகில் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்யுளில் ஓசை குறையும் பொழுது அதனை நிறைவு செய்ய சொல்லின் முதல், இடை, இறுதியில் உள்ள உயிர் நெடில் எழுத்துக்கள் அளபெடுத்து வருவதை செய்யுளிசை அளபெடை என்பர். இதை இசை நிறை அளபெடை என்றும் வழங்குவர்.
குறிப்பு :
அ என்ற எழுத்து வெளிப்படையாக வந்தால் , அதனை செய்யுளிசை அளபெடை அல்லது இசை நிறை அளபெடை என்றும் கூறலாம்.
எ.கா:
கடாஅ
கடாஅக்
படாஅ
இன்னிசை அளபெடை:
"கெடுப்பதூவும் கெட்டார்க்கு சார்வாய்
மற்றாங்கே
எடுப்பதூவும் எல்லாம் மழை"
இக்குறட்பாவில் கெடுப்பதூஉம் எடுப்பதூஉம் என்னும் சொற்களில் உள்ள தூ என்னும் நெட்டெழுத்து அளபெடுத்துள்ளது.
கெடுப்பதும் எடுப்பதும் என்பது இயல்பான சொற்கள்.
கெடுப்பதும் எடுப்பதும் என்று இருப்பினும் யாப்பிலக்கணம் கெடுவதில்லை.
ஆனால் இனிய ஓசையை தரும் பொருட்டு கெடுப்பதூவும் எடுப்பதூவும் என்று அளபெடுத்துள்ளது.
இவ்வாறு செய்யுளில் ஓசை குறையாத பொழுதும் செவிக்கு இனிய ஓசையை தரும் பொருட்டு உயிர் குறில் நெடிலாகி மேலும் அளபெடுத்து வருவது இன்னிசை அளபெடை ஆகும்.
சொல்லிசை அளபெடை:
"உரன்நசைஇ உள்ளம்
துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னும் உள்ளேன்."
இக்குறட்பாவில் உரனசை, வரனசை என்றும் இருப்பினும் செய்யுளின் ஓசை குறைவதில்லை.
நசை என்பது விருப்பம் என்னும் பொருள் தரும் பெயர்ச்சொல்லாகும்.
அப்பொருள் நசைஇ என அளபெடுத்தலால் விரும்பி என்னும் பொருள் தரும் வினைச்சொல் ஆயிற்று.
இவ்வாறு செய்யுளில் ஓசை குறையாத பொழுதும் ஒரு சொல் மற்றொரு சொல்லாக திரிவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.
பெயர்ச்சொல் அளபடையால் திரிந்து பெயரெச்சமாகவோ வினையெச்சமாகவோ வரும்.
மீண்டும் அடுத்த பதிவில்........
PLEASE CLICK THE FOLLOW BUTTON 🙏
No comments:
Post a Comment