இசைையானது சிறப்புடைய கலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஒலியின் அடிப்படையில் அமைவது இசைக்கலை. அதைக் கேட்டுத்தான் சுவைக்க முடியும்.
ஒளியை நுட்ப உணர்வால் செவிப்புலனின் நுகர்வுத் திறன் கொண்டு பாகுபடுத்தி ஒலிப்பகுதிகளை முறையாக ஒன்றுடன் ஒன்றாகச் சுவை தரும் வண்ணம் இணைத்து இன்னிசை எழுப்புமாறு அமைத்துக் காட்டுவதில் இசைக்கலை தோற்றம் கொள்கிறது.
கரடு முரடாக இருக்கும் ஒலியை மனத்தால் கட்டுப்படுத்தி அறிவுத்திறனால் ஒழுங்கான முறையமைப்புக்குக் கொண்டுவந்து சீர்ப்படுத்துவதில் இசைக்கலையின் அடிப்படைத் தன்மை அமைந்துள்ளது.
ஒலி பலவகையாக எழுவது. பலவிதமாகச் செவிப்புலனில் பதிவாவது. எவற்றிலிருந்தும் ஒலி எழலாம். எவ்வாறு வேண்டுமென்றாலும் அது எழலாம்.எப்படி எழுந்தாலும் அனைத்தும் ஒலியாகவே கருதப்படும்.
அது வன்மையாகவோ மென்மையாகவோ சமனாகவோ இத்தன்மைகள் கலந்தனவாகவோ அமையலாம்.எத்தன்மையுடையதாக இருப்பினும் அது ஒளி என்னும் பொது சொல்லில் அடக்கப்பட்டுவிடும்.
★ ஒலியை குறிப்பிடத்தக்கவை
(significant sounds )
★ குறிப்பிட்டு காட்ட முடியாத குழப்ப
ஒலிகள் (confused sounds )
என இரு கூறாகப் பிரிக்கலாம்.
குறிப்பிடத்தக்க ஒலிகள்:
★ குயிலின் கூவல்,
★ பசுவின் கதறல்,
★ வண்டியின் முரன்றொலி,
★ அருவியின் பாயொலி,
★ யாழொலி,
★ அழுகையொலி,
★ பாடலிசை,
★ வெடியொலி
★ இடி முழக்கம் ஆகியவை
குறிப்பிட்டு காட்டத்தக்கவை.
குழப்ப ஒலிகள்:
★ சந்தை இரைச்சல்,
★ விழாவொலி,
★ காட்டுக் கூச்சல் போன்றவை குழப்ப ஒலிகள்.
குறிப்பிட்டுக் காட்டத்தக்க ஒலிகளை மூன்று வகையாகப் பிரித்துக் காட்டலாம்.
1. இனியவை (Mellifluous)
(குழலிசை, பாவிசை, கூட்டிசை
ஆகியவை இனிய ஒலிகள்)
2. சாதாரணமானவை (ordinary)
( பூனை கத்தல், மரக்கொம்புகள்
உரசலொலி, காக்கை கரைதல்,
பேச்சொலி போன்றவை
சாதாரண ஒலிகள்)
3. கடுமையானவை (Hard)
( புலியின் உறுமல், இடிக்குரல்,
சீற்றவுரை, குண்டு வெடித்தல்
முதலியன கடுமையானவை)
இனிய ஒலிகள்:
★ தனித்து இனிப்பவையாகவும்.
(singularly harmonious)
★ கூட்டாக இணைந்து இனிப்பவையாகவும்
(harmoniously blended sounds in band)
இரண்டாகப் பிரிக்கலாம்.
தனித்து ஒருவர் பாடுதல்,
குழலை மட்டும் இசைத்தல், முழவிசை, தவிலிசை போன்றவை தனித்தினிக்கும் ஒலிகள்.
யாழும், குரலும், முழவும் இணைந்து இசையும் தாளமும் பொருந்தி இன் குரலாக அமைவது கூட்டின்னிசையாகும். பலவகையான இசையின் இனிய கூட்டுச் சேர்க்கையால் தனி ஒருவர் பாடுவதையும் இனிய கூட்டிசையாக கருதுவதும் உண்டு.
இசையிணைவின்றி இனிமை தோன்றாது. ஆகையினால் தனித்தினிப்பவையும் கூட்டிசையே ஆகும் என்பதை நன்கு உணர வேண்டும்.
நுட்பமான முறையில் ஒலியைப் பிரித்து உணர வேண்டியுள்ளது.
செவிப்புலனின் திறனால் கேட்டு நுனித்துணரும் மனப்பக்குவ நிலையால் நன்கு அறிந்து ஒலியின் தன்மையை தெரிந்து கொள்வோருக்கு இசை கலை சாதனை ஆகும். இசை ஓர் அரிய கலை என்பது இதனால் விளங்கும்.
மீண்டும்
அடுத்த
பதிவில் ........
🙏 நன்றி. 🙏
No comments:
Post a Comment