மொழிக்கு முதற்காரணமாய், அணுத்திரலின் காரியமாய் இருப்பது எழுத்தாகும்.
ஒலிக்கப்படுதல் (உச்சரிக்கப்படுதல்)ஒலி எழுத்து என்றும், எழுதப்படுதல் வரி எழுத்து என்றும் கூறப்படும்.
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 ஆகும். அவற்றை ,
உயிரெழுத்து - 12
மெய் எழுத்து - 18
உயிர்மெய் எழுத்து - 216
ஆயுத எழுத்து - 1
என வகைப்படுத்துவர்.
தமிழ் எழுத்துக்கள்:
1. முதல் எழுத்துக்கள்
2. சார்பெழுத்துக்கள்
என இரு வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
முதல் எழுத்துக்கள்:
உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் மெய்யெழுத்துக்கள் பதினெட்டுமாகிய முப்பது எழுத்துக்களும் தமிழ் மொழிக்கு முதன்மையான எழுத்துகளாகும்.
இவை பிற எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படை காரணமாக உள்ளன. ஆதலால் இவ் எழுத்துக்கள் முதல் எழுத்துக்கள் எனப்படும்.
உயிர் எழுத்துக்கள்:
1. அ,
2. ஆ,
3. இ,
4. ஈ,
5. உ,
6. ஊ,
7. எ,
8. ஏ,
9. ஐ,
10. ஒ,
11. ஓ,
12. ஔ
என்பன உயிர் எழுத்துக்கள் ஆகும்.
ஒலிப்பின் அளவைக் கொண்டு இவற்றை குறில், நெடில் என இரு வகையாகப் பிரிக்கலாம்.
குறில்:
அ, இ, உ, எ, ஒ - உயிர்க் குறில்
நெடில்:
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - உயிர்
நெடில்
மெய்யெழுத்துக்கள்:
1. க்
2. ங்
3. ச்
4. ஞ்
5. ட்
6. ண்
7. த்
8. ந்
9. ப்
10. ம்
11. ய்
12. ர்
13. ல்
14. வ்
15. ழ்
16. ள்
17. ற்
18. ன்
என்பன மெய்யெழுத்துக்கள் ஆகும்.
இவை ஒலிக்கும் முறையால்,
1. வல்லினம்,
2. மெல்லினம்,
3. இடையினம் .
என மூன்று வகைப்படும்.
1.வல்லின மெய்:
க், ச் , ட, த், ப், ற்
2.மெல்லின மெய் :
ங், ஞ், ண், ந், ம், ன்
3. இடையின மெய்:
ய், ர், ல், வ், ழ், ள்
இந்த வகைப்படுத்தல் தமிழ் மொழியின் ஒலியியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சார்பெழுத்துக்கள் பற்றி அடுத்த பதிவில்......
Please click the follow button 🙏
No comments:
Post a Comment