தொகைநிலைத் தொடர்கள்
முன்னுரை :
பெயர்ச் சொல்லோடு வினைச் சொல்லும் பெயர்ச் சொல்லும் சேரும் தொடரில் இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு, உவமை முதலியவற்றின் உறுப்புகளோ (தொக்கு) மறைந்து நிற்குமானால் அது தொகைநிலைத் தொடர் எனப்படும். இதனைத் தொகை என்றும் சுருக்கமாக கூறுவர்.
வினைச் சொல்லோடு வினைச் சொல் சேர்ந்து தொகைநிலைத் தொடர் அமைவதில்லை.
தொகைநிலைத் தொடரின் வகைகள்:
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை,
1.வேற்றுமை தொகை
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை
5.உம்மைத் தொகை
6. அன்மொழித்தொகை
என்பனவாகும்.
1.வேற்றுமை தொகை
திருக்குறள் படிக்கிறான்.
இத்தொடர் 'திருக்குறளைப் படிக்கிறான்' என விரிந்து நின்று பொருளை உணர்த்துகின்றது.
ஆனால் கொடுக்கப்பட்டுள்ள தொடரில் உள்ள இரு சொற்களுக்கும் இடையில் அப்பொருளை தரக்கூடிய 'ஐ' என்னும் வேற்றுமை உருபு வரவில்லை.
அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது.
இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் உணர்த்துவதை வேற்றுமை தொகை என்று கூறுவர்.
1.பால் அருந்தினான்
(பாலை அருந்தினான்)
( ஐ)
இரண்டாம்
வேற்றுமைத்தொகை
2. தலை வணங்கினான்
(தலையால் வணங்கினான்)
(ஆல்)
மூன்றாம்
வேற்றுமைத்தொகை
3.பள்ளி சென்றாள்
(பள்ளிக்குச் சென்றான்)
(கு)
நன்காம்
வேற்றுமைத்தொகை
4. சிறை நீங்கினான்
(சிறையின் நீங்கினான்)
(இன்)
ஐந்தாம்
வேற்றுமைத்தொகை
5.அழகன் நூல்
(அழகனது நூல்)
(அது)
ஆறாம்
வேற்றுமைத்தொகை
6. மலை வாழ்வோர்
(மலை கண் வாழ்வோர்)
(கண்)
ஏழாம்
வேற்றுமைத்தொகை
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லாததால் அவற்றின் தொகையும் இல்லையாகும்.
உருபும், பயனும் உடன் தொக்க தொகை:
தேர்ப்பாகன்
இத்தொடர் 'தேரை ஓட்டும் பாகன்' என விரிந்து பொருளை உணர்த்துகின்றது.
கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கு இடையில் 'ஐ' என்னும் வேற்றுமை உருபும்
'ஓட்டும்' என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.
இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும், அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.
இதுவும் வேற்றுமை தொகையே ஆகும்.
தேர்ப்பாகன்
(தேரை
ஓட்டும் பாகன்)
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
பொன் வளையல்
( பொன்னால் செய்த
வளையல் )
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தலைவலி மருந்து
( தலை வலிக்கு
தரும் மருந்து)
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
குழாய் தண்ணீர்
( குழாயிலிருந்து
கிடைக்கும்
தண்ணீர்)
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
காட்டுப்புலி
(காட்டின் கண்
வாழும் புலி)
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
ஆறாம் வேற்றுமை தொகையில் பயன் தரும் சொல் மறைந்து வருதல் இல்லை .
2.வினைத்தொகை
குடிநீர்,
விரிகடல்.
குடி,விரி என்பவை வினைப் பகுதிகள். இவை முறையே நீர்,கடல் என்னும் பெயர்ச் சொற்களோடு சேர்ந்து பெயரெச்சங்கள் ஆயின. மேலும் இவை
குடித்த நீர்
குடிக்கின்ற நீர்
குடிக்கும் நீர்
எனவும்
விரிந்த கடல்
விரிகின்ற கடல்
விரியும் கடல்
எனவும் முக் காலத்திற்கும் பொருந்தும்படி பிரிந்து பொருள் தருகின்றன.காலம் காட்டும் இடை நிலைகள் இப் பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன.
இவ்வாறு காலம் காட்டும் இடை நிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத் தொகை எனப்படும். காலம் கடந்த பெயரெச்சமே வினைத் தொகை ஆகும் .
குறிப்பு
வினைபகுதியும் அடுத்துப்
பெயர்ச்சொல்லும் அமைந்த
சொற்றொடர்களிலேயே
வினைத்தொகை அமையும்.
இதன்
தொடர்ச்சி
மீண்டும்
அடுத்த
பதிவில்.........👍
👆This content sponsored by👇
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"




No comments:
Post a Comment